ஐ.எம்.எப்-யிடம் கடன் உத்தரவாதம் அளித்த இந்தியாவுக்கு இலங்கை நன்றி.!! - Seithipunal
Seithipunal


பணவீக்கம், அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் அரசியல் குழப்பத்தால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில் இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை அரசு, சர்வதேச நிதியத்திடம் 2.9 பில்லியன் டாலர் கடன் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் இலங்கைக்கு கடன் அளித்து வரும் இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடமிருந்து கடன் உத்திரவாதம் அளிக்குமாறு சர்வதேச நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்திய நிதி அமைச்சகம் கடன் உத்தரவாதத்திற்கான கடிதத்தை சர்வதேச நிதியத்திடம் சமீபத்தில் வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றபோது, சரியான நேரத்தில் இந்தியா வழங்கி இருக்கும் இந்த உதவிக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நிதியம் ஏற்றுக்கொள்ளதக்க வகையில் இந்தியா தனது உத்தரவாதத்தை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka thanks India for loan guarantee to IMF


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->