அரசை கவிழ்க்க நினைத்தால் ராணுவ நடவடிக்கைதான்! ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை!
Sri Lanka president ranil warned protesters
இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் அல்லது போராட்டத்தின் மூலம் அரசை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டால் அதனை ராணுவத்தைக் கொண்டு அல்லது அவசர சட்டங்கள் மூலம் ஒடுக்குவோம் என அதிபர் ரனில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே "இலங்கையின் பொருளாதாரம் முன்னேறும் வரை நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை. இலங்கை பொருளாதாரம் சீராகிய பின்னரே தேர்தல் நடத்த முடியும். சட்டபூர்வமாக யார் வேண்டுமானாலும் போராட்டம் அல்லது கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம்.

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கூச்சலிடலாம், என்னை சர்வாதிகாரி என்று கூட சொல்லலாம். அதில் எனக்கு எந்த ஆட்சேபினையும் இல்லை. நீங்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு முன்பு காவல்துறையினரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். காவல்துறையினரின் அனுமதி மீறி போராட்டம் நடத்தினால் அவர்களை தடுத்து நிறுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

மக்கள் போராட்டம் மூலம் அரசாங்கத்தை கவிழ்கும் முயற்சியில் யாராவது ஈடுபட்டால் அனுமதிக்க மாட்டேன். அத்தகைய செயலை ராணுவ பலம் அல்லது அவசர சட்டங்கள் மூலம் நசுக்குவோம். இலங்கையில் வன்முறைக்கு இடமில்லை" என தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் விக்ரமசிங்க தனது உரையின் போது நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 11-ம் தேதி முடிவடைகிறது. அதன்பின்பு அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்று அதில் அதிகார பதிவு உட்பட இன நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படும் என தெரிய வருகிறது.
English Summary
Sri Lanka president ranil warned protesters