காதுவலியால் துடிதுடித்த நபர்.! பரிசோதனை செய்த மருத்துவருக்கு உயிருடன் காத்திருந்த பேரதிர்ச்சி!! வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


சீனாவின் ஜியான்சூ மாகாணத்தில் வசித்து வருபவர் லி. இவருக்கு கடந்த சில நாட்களாகவே கடுமையான காதுவலி இருந்துள்ளது . மேலும் காதில் எரிச்சல் மற்றும் அரிப்பும் இருந்துள்ளது.இந்நிலையில் காதில் அழுக்கு இருக்கலாம் அதனாலேயே இவ்வாறு வலி ஏற்படலாம் என எண்ணிய லி தனது காதுகளை நன்கு சுத்தப்படுத்தியுள்ளார்.

ஆனாலும் காதுவலி, எரிச்சல் மற்றும் அரிப்பு சுத்தமாக நிற்கவில்லை. இதனால் பெரும் அவதிப்பட்டு வந்த லி உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு லி-யை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேலோட்டமாக ஆராய்ச்சி செய்து காதில் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால் காதுவலியும், அரிப்பும் நிற்காமல் தொடர்ந்தநிலையில், மருத்துவர் மைக்ரோஸ்கோப் மூலம் அவரது காதுக்குள்  சோதனை செய்தனர். அப்போது  லியின் காதில் சிலந்தி ஒன்று வளைப்பின்னி இருந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் லி-யின் காதுக்குள் உப்பு கலந்த நீரை ஒரு சில  துளிகளை  ஊற்றியுள்ளனர். அதில் சிலந்தி உயிருடன் வெளிவந்துள்ளது. இந்நிலையில் லி-யின் காதின் உள்ளே பரிசோதனை செய்யப்பட்ட வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

English Summary

spider make nest in man ear


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal