சவுதிக்கு அடித்தது ஜாக்பாட்! தோண்ட தோண்ட தங்கம்....   - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியாவில் தோண்டத் தோண்ட தங்கம் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  கச்சா எண்ணெய் விநியோகத்தில் கோலோச்சி வரும் சவுதி அரேபியா, தனது வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக மாற்று வழிகளில் கவனம் செலுத்தி  வருகிறது.  

இந்நிலையில், சவூதி அரேபிய சுரங்க நிறுவனமான MAADEN பல தங்க கனி படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.  இதன் மூலம் இப்பிராந்தியத்தில் தங்க உற்பத்தியை மையப்படுத்தி மைனிங் பணிகளை விரிவாக்கம் செய்யப்படும் சாத்தியக்கூறுகள் தற்போது அதிகரித்துள்ளது. 

இந்த கண்டுபிடிப்பு  மன்னர் முகமது பின் சல்மான் 2022ல் அறிவிக்கப்பட்ட Maaden இன் விரிவான ஆய்வுத் திட்டத்தினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது . சவுதி அரேபியா   உலோக உற்பத்திக்காக  விரிவான ஆய்வை மேற்கொண்டிருக்கும் பொது தங்கம் கிடைத்துள்ளது சவூதி அரேபியாவை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

சென்ற வருட இறுதியில் மன்சூரா மஸ்ஸாரா தங்கச் சுரங்கம் சவூதி அரேபியாவில் சுமார் 7 மில்லியன் அவுன்ஸ் மதிப்பிலான தங்க கனிமம் இருப்பதாகத் தெரிவித்திருந்தது. மேலும்,  ஆண்டிற்கு 2,50,000 அவுன்ஸ் தங்கம் தயாரிக்கும் கட்டமைப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saudi hit the jackpot! Digged gold...


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->