வார விடுமுறை எதிரொலி - தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் மக்களின் வசதிக்காக வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில், நாளை முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

"முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வருகிற 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் 3-ம் தேதி (நாளை) 290 பஸ்களும், 4-ம் தேதி (நாளை மறுநாள்) 365 பஸ்களும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3 மற்றும் 4-ம் தேதி 55 பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதியில் வெள்ளிக்கிழமை 5,827 பயணிகளும் சனிக்கிழமை 3,831 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 6,522 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

எனவே, நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in < http://www.tnstc.in > மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

extra bus run in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->