அணு ஆயுத போருக்கு தயாராகிறதா ரஷ்யா? புடினால் பதறும் உலக நாடுகள்!! - Seithipunal
Seithipunal


தற்போது உலகில் 2 பெரும் யுத்தங்கள் நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய போர் 9 மாதங்களுக்கு மேல் நீடித்து வரும் இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்லையில் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா அணு ஆயுத தடுப்புச் சோதனை நடத்தி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலம், கடல், வானில் இருந்து தாக்கக்கூடிய வகையில் இந்த அணு ஆயுத சோதனையானது ரஷ்யாவால் நடத்தப்பட்டுள்ளது.

விமானம், நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணுகுண்டு வீசும் வகையில் நடத்தப்பட்ட இந்த அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக ரஷ்யா நிகழ்த்தி காட்டியுள்ளது. பெரிய தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்த சோதனை நடத்தியுள்ளதாக ரஷ்ய அமைச்சர் செர்கை ஷோகுய் தெரிவித்துள்ளார். ஐநாவின் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியதற்கு ரஷ்ய நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்திருந்த நிலையில் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளது. 

இந்த சோதனையின் மூலம் உக்ரைன் மீது அணு ஆயுதங்கள் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. இந்த அணு ஆயுத சோதனை தாக்குதல் ஒத்திகையை ரஷ்யா அதிபர் புடின் நேரில் பார்வையிட்டுள்ளார். ரஷ்யா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதை முறியடிக்கும் வகையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின் இந்த அதிரடி நடவடிக்கையால் உலக நாடுகள் மத்தியில் பதற்றம் சூழ்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia practice nuclear strike testing


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->