டொனெட்ஸ்க் மாகாணம் முழுவதையும் கட்டுக்குள் கொண்டுவரும் வரை உக்ரைன் மீதான போர் தொடரும் - ரஷ்யா - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உட்ரைனில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உட்பட 1000-கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

மேலும் போர் நிறுத்தம் மற்றும் அமைதி பேச்சு வார்த்தைக்கு இரு நாடுகளையும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் பல வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர் எப்பொழுது முடிவுக்கு வரும் என்று தெரியாமல், பதற்றம் நிலாவி வரும் நிலையில், டொனெட்ஸ்க் மாகாணம் முழுவதையும் கட்டுக்குள் கொண்டுவரும் வரை உக்ரைன் மீதான போர் தொடரும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia has announced war continue until it takes control of the entire ukraine Donetsk region


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->