ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த.. பிரபல ஹாலிவுட் நடிகர் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என பிரபல ஹாலிவுட் மூத்த நடிகர் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களை முதலில் தாக்கிய ரஷ்ய படைகள் தற்போது குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் மற்றும்  பிரபலங்கள் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகைகள் பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியா முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ரஷ்யாவுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது நண்பனான ரஷ்ய நண்பர்கள் மற்றும் உக்ரைனில் பணியாற்றும் ரஷ்ய வீரர் களுக்கு சென்று அடையும் வகையில் இந்த செய்தியை அனுப்புகிறேன்.

உலகில் நடக்கும் விஷயங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்பட்டவை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இருப்பதால், நான் உங்களிடம் பேசுகிறேன் உக்ரைனில் நடக்கும் போரை பற்றிய உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ரஷ்ய படையெடுப்பு நூத்தி நாற்பத்தி ஒரு நாடுகளால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளால் உலகமே ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிவது உலகை சீற்றமடையச் செய்துள்ளது.

உலகப் பொருளாதாரத் தடைகள் உங்கள் நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ளன. இது உங்கள் தாத்தா அல்லது உங்கள் பெரியப்பா போராடியது போல ரஷியாவைக் காப்பதற்கான போர் அல்ல.இது சட்டவிரோதமான போர்.   இந்த ஒளிபரப்பைக் கேட்கும் ரஷ்ய வீரர்களுக்கு, நான் பேசும் உண்மை தெரியும். நீங்கள் அதை உங்கள் கண்களில் பார்த்திருக்கிறீர்கள்’ என்று கூறியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia and Ukraine war please stop Arnold


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->