அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் சரிவு..! - வரலாற்றிலேயே மிக மோசமான நிலை! வர்த்தக இழுபறி தாக்கம் அதிகரிப்பு
Rupee falls against US dollar Worst history Impact trade tensions increases
அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில், நேற்று பதிவான 90.30 என்ற வரலாற்றிலேயே மிகக் குறைந்த மதிப்பு, இன்று மேலும் தாழ்ந்து ஒரு அமெரிக்க டாலருக்கு 90.43 ரூபாய் என புதிய அதிர்ச்சி நிலையை தொட்டது.
இந்தியா–அமெரிக்கா இடையிலான வரி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முட்டிக் கிடப்பது, இரு நாடுகளின் வர்த்தக ஒப்பந்தங்கள் தாமதமாவது போன்ற காரணிகள் சந்தையில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

இதன் தாக்கமாக அந்நியச் செலாவணி சந்தை முதலீட்டாளர்கள் பதட்டமடைந்து, ரூபாய் மதிப்பில் பெரும் அழுத்தம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.
பொருளாதார வட்டாரங்களின் கணிப்புப்படி, முக்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் வெளியாகும் வரை ரூபாய் மீட்பு சற்று சிரமம் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Rupee falls against US dollar Worst history Impact trade tensions increases