ஓட்டுனரின் அலட்சியத்தால் அரங்கேறிய விபத்து.. உதவி செய்த திமிங்கலம்.! - Seithipunal
Seithipunal


நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டாம் மாகாணத்தில் பிஜிஹென்சி நகர் உள்ளது. இந்த நகரின் டி அக்கர்ஸ் என்ற பகுதியில் மெட்ரோ இரயில் நிலையம் உள்ளது. அந்நகரின் பல பகுதிகளை இணைக்கும் முறையில் மெட்ரோ இரயில் பயணம் உள்ள நிலையில், டி அக்கர்ஸ் இரயில் நிலையம் இறுதி நிறுத்தமாக உள்ளது. 

நீர்ப்பரப்பில் மேலே அமைக்கப்பட்டுள்ள டி அக்கர்ஸ் மெட்ரோ இரயில் நிலையத்தின் முடிவில், திமிங்கல வால் பகுதி போன்ற அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திமிங்கல அலங்கார வளைவு கடந்த 2002 ஆம் வருடத்தில் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியை முடித்துக்கொண்ட மெட்ரோ இரயில், இறுதி இரயில் நிலையமான டி அக்கர்ஸ்க்கு வந்துள்ளது. இந்த இரயிலில் பயணிகள் இல்லாத நிலையில், இரயில் ஓட்டுநர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வந்துள்ளார். 

இதனால் அதிவேகத்தில் வந்த இரயில் தண்டவாளத்தை விட்டு வேகமாக சென்று, நீருக்குள் விழுவது போல் இறுதிக்கட்ட தடுப்பு சுவரை இடித்து சென்றுள்ளது. இதன்போது அந்தரத்தில் பாய்ந்த இரயில் பெட்டிகள், இறுதியில் இருந்த திமிங்கல வாலில் நின்றுள்ளது. 

இந்த விபத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய இரயில்வே நிலைய அதிகாரிகள், காயத்துடன் இருந்த ஓட்டுனரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rotterdam Metro Train Accident Suspended whale Construction


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal