ஆஸ்திரேலியாவிற்கு சென்ற குவாண்டஸ் விமானம்.! அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கு காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து நகரில் இருந்து குவாண்டஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று ஆஸ்திரேலியா நாட்டிற்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 

இவ்விமானம், ஆஸ்திரேலியா நாட்டிற்கும், நியூசிலாந்திற்கும் இடையே டாஸ்மான் கடல் பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது என்ஜினில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். இரட்டை என்ஜின் கொண்ட இந்த விமானத்தில் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. 

இதையறிந்த விமானிகள் உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமானம் விபத்தில் சிக்க வாய்ப்பு இருப்பதற்கான எச்சரிக்கை ஒளியை கொடுத்தனர். இதனால், விமானம் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்க வந்தது. 

இதற்கிடையே, விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டனர். ஒரு என்ஜினில் விமானத்தை இயக்கிய விமானிகள் அதை சிட்னி விமான நிலையத்தில் தரை இறக்கினர்.

இதையடுத்து, விமானம் பத்திரமாக தரை இறங்கியதனால் பயணிகள் மற்றும் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

quantas flight suddenly land in sydney airport for engine problam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->