நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற புடின் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவிற்கு வருமாறு  பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிபர் புடினை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்ய அதிபர் புடின் ஜெய்சங்கரிடம் உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து கொந்தளிப்பையும் மீறி, ஆசியாவில் உள்ள நமது உண்மையான நண்பரான இந்தியாவுடனான உறவு அதிகரித்து வருவதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் அன்பான நண்பரும், பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்யாவிற்கு வந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நாங்கள் அவரைப் பார்க்க விரும்புகிறோம் என பிரதமர் நரேந்திர மோடியிடம் சொல்லுங்கள்.அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற வேண்டும். பாரம்பரிய மரபுவழி நட்புறவு நம் நாடுகளுக்கு இடையே நீடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin congratulates pmmodi victory in parliament elections


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->