ரஷ்யாவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் எந்த முயற்சியும் தோல்வியுறும் - அதிபர் புதின் அதிரடி - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஒன்றரை வருடங்களாக நடந்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ரஷ்ய தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இதனிடையே போரில் ரஷ்ய படையினருடன் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்த வாக்னர் கூலிப்படையினர் ரஷியாவிற்கு எதிராக திரும்பினர். இதனால் ரஷ்யாவில் ராணுவத்திற்கு எதிராக ஆயுத கிளர்ச்சி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பெலாரஸ் அதிபா் அலெக்சாண்டா் லுகஷென்கோவின் துரித நடவடிக்கையால் ஆயுத கிளர்ச்சி 24 மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மக்களிடையே உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், ஆயுதக் கிளர்ச்சியால் ரஷ்யாவில் உயிர் சேதத்தை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனது உத்தரவை ஏற்று ஆதரவு அளித்த ரஷ்ய மக்களுக்கும் மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் நடுநிலையாக செயல்பட்ட பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டா் லுகஷென்கோவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கை பொம்மையாக செயல்படுகின்றனர். ரஷ்யாவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் எந்த ஒரு நாட்டின் முயற்சியும் தோல்வியில் முடிவடையும். ரஷ்யா ஒன்றுபட்டு நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவிலிருந்து வெளியேறிய வாக்னர் குழு படைவீரர்கள், பெலாரஸ்க்கு செல்லலாம் அல்லது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராணுவத்தில் பணியாற்றலாம் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Putin says Any attempt to create chaos in Russia will fail


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->