பிராா்த்தனைக் கூட்டத்தில் திடீர் குண்டுவெடிப்பு: உடல் கருகி உயிரிழந்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


பிலிப்பின்ஸில் நேற்று நடைபெற்ற கத்தோலிக்க கிறிஸ்துவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் தலைநகர் மணிலாவில் பெரும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பல்கலைக்கழகத்தின் உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது எதிர்பாராத விதமாக குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த தாக்கவும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அதிபர் இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

டவ்லா இஸ்லாமியா என்ற ஆயுத குழுவை சேர்ந்த பயங்கரவாதிகள் 11 பேர் கடந்த வெள்ளிக்கிழமை பிலிப்பின்ஸ் ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டனர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prayer meeting Bomb blast Burned to death


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->