நேபாளத்தை அதிரவைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிர் பலி!  - Seithipunal
Seithipunal


நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு திடீரென கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க புவியியல் மையம் முதற்கட்ட அளவில் நிலநடுக்கம் 5.6 ரிக்டர் பதிவானதாகவும் 11 மெயில் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்தது. 

அதன் பிறகு 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளம் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் உள்ள ஜார்ஜிகோர்ட் நிலநடுக்கத்தின் மைய புள்ளியாக இருந்தது என நேபாளத்தின் நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

இதனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் இடிந்து தரமட்டமாகியுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்பு பணியில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் நிலசரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்ல முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் இருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் டெல்லியில் இருந்தவர்கள் லேசான அதிர்வை உணர்ந்தனர். இந்நிலையில் கடும் நிலநடுக்கத்தின் காரணமாக நேபாளத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Powerful earthquake in Nepal 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->