ஜப்பான் நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டு அரசு சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் சின்ஷோவிற்கு நடத்தப்படுகின்ற இறுதி மரியாதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். 

இந்த பயணத்தின் பொழுது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசவுள்ளார். ஜப்பான் அரசு சார்பில் நடத்தப்படுகின்ற இந்த இறுதி மரியாதை விழாவானது டோக்கியோவில் நடைபெற இருக்கிறது. 

இந்தியாவின் நட்பு நாடுகளில் மிக முக்கியமானது ஜப்பான் இரு நாடுகளும் குவாட் அமைப்பில் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதில் ஜப்பான் மற்றும் இந்தியா தவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இருக்கின்றன. 

முன்னாள் பிரதமர் ஷிண்ஷோ அபே மற்றும் நரேந்திர மோடி இருவருக்கும் இடையில் சிறப்பான நட்புறவு இருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றிருந்த பொழுது, அப்போதைய பிரதமர் ஷிண்ஷோ அபே அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். 

கடந்த ஜூலை 8-ல் ஜப்பானின் நாரா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சின்ஷோ தாக்குதலுக்கு உள்ளாகினார். அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi traveling to japan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->