வடக்கு நியூயார்க்கில் கடும் பனிப்புயல்.! வீட்டுக்குள்ளே முடங்கிய மக்கள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் வடக்கு நியூயார்க் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் நியூயார்க் மாகாணத்தின் முக்கிய பகுதிகளான ஆர்ச்சர்ட் பார்க், பஃபல்லோ மற்றும் நேச்சுரல் பிரிட்ஜ் பகுதிகளில் தரையிலிருந்து 6 அடிக்கு மேல் பணி படர்ந்து காணப்படுகிறது.

இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பனிப்புயலினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பேரிடர் தடுப்பு பணியாளர்கள் சூழ்நிலையை சமாளிக்க பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People stay home as snow storm hit northern newyork


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->