கோடிகோடியாக கடன் வாங்கி சீனாவிடம் கையேந்தும் பாகிஸ்தான்.. கழுத்தை சுற்றிய பாம்பாய் பதறும் இம்ரான்.! - Seithipunal
Seithipunal


சவுதி அரேபிய நாட்டினை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகமும் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனை உடனடியாக திரும்ப செலுத்த பாகிஸ்தானை வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2018 ம் வருடத்தில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற பின்னர், அந்த நாட்டிற்கு ரூ.21,000 கோடி கடன் உட்பட 43 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதியை சவுதி அரேபிய அரசு அறிவித்தது. சில கட்டுப்பாடுகளுடன் இந்த நிதிஉதவி வழங்கப்பட்டது. 

ஆனால், இந்த கட்டுப்பாடுகளை கணக்கில் கொள்ளாத பாகிஸ்தான் அரசு, இதற்கு மாற்றாக புதிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க முயன்றதால், கடனை உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சவுதி அரசு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. 

இந்த கடனை சீனாவிடம் இருந்து வாங்கி பாகிஸ்தான் செலுத்தி வரும் நிலையில், அதே பாணியில் ரூ.21 ஆயிரம் கோடி கடனை உடனடியாகச் செலுத்துமாறு ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தானை வலியுறுத்தி இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Struggle to Pay Loan form Arab and Saudi Arabia Countries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->