டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 276ஆக வீழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தையில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 225ஆக இருந்த நிலையில் தற்பொழுது மேலும் 276ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கு பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் வெளிநாட்டு கடன்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் நாட்டின் 60 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தானியங்களை இறக்குமதி செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் ரெசா பகீர் கூறும்பொழுது, அன்னிய செலாவணி பற்றாக்குறை, ஏற்றுமதி பாதிப்பு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் பாகிஸ்தானிடமிருந்து பணம் அனுப்புவதில் ஏற்பட்ட சரிவு ரூபாயை நேரடியாக பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச சந்தைகளில் பாகிஸ்தான் மீதான எதிர்மறையான உணர்வுகள் மற்றும் உக்ரைன் போரால் பன்னாட்டு சந்தைகளில் ஏற்பட்ட மந்த நிலை ஆகியவை ரூபாயில் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan rupee falls to 276 against the dollar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->