மிலாடி நபி கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த கொடுமை! தற்கொலை படை காரணமா? - Seithipunal
Seithipunal


உலகெங்கும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை மிலாடி நபி என்பதால் பாகிஸ்தான் மஸ்டங் பகுதியில் உள்ள மதினா மசூதியில் இந்த பண்டிகையை கொண்டாடவும் ஊர்வலமாக செல்லவும் மக்கள் திட்டமிட்டு இருந்தனர். 

அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த வெடி விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். 13 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இது ஒரு தற்கொலை படை தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. இந்த வெடிகுண்டு விபத்தில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மஸ்டங் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் உயரிழிந்துள்ளார். 

கஷ்கோரியின் காருக்கு அறிக்கை தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றதாக நகர காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. 

அதிலும் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் மாநிலத்தின் இடைக்கால செய்தித் துறை அமைச்சர் இது குறித்து தெரிவித்திருப்பதாவது, 'அந்நிய நாட்டு சக்திகளின் உதவியுடன் மத சகிப்புத்தன்மையையும் அமைதியையும் அழிக்க எதிரிகள் நினைக்கின்றனர். 

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றார். இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Milady Nabi celebration mosque near Bomb blast 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->