43 வயது காமுகனின் கொடூரம்.. 13 வயது சிறுமி.. மதம் மாற்றி அரங்கேறிய கொடூரம்.. பாக்.கில் அடுத்தடுத்து கொடூரம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவ பெண்களை கடத்தி, கட்டாய மதம் மாற்றி திருமணம் செய்துகொள்ளும் கொடூரம் அரங்கேறி வருகிறது. இது லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்தியாவிலும் நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கு லவ் ஜிகாத்திற்கு காதல் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. 

அங்குள்ள கராச்சி நகரை சார்ந்தவர் அலி அசார் (வயது 44). இவர் அர்ஜு ராஜா என்ற 13 வயது கிறிஸ்துவ சிறுமியை கடத்தியுள்ளார். பின்னர் அவரை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயப்படுத்தி மாற்றி, அவரின் ஆவணங்களையும் மாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2007 ஆம் வருடத்தில் பிறந்த சிறுமியின் பள்ளி ஆவணத்தில் 13 வயது என்று குறிப்பிடப்படும் நிலையில், பல்வேறு அரசு ஆவணத்தில் சிறுமியை 19 வயதானவர் என்று குறிப்பிட்டு, திருமணம் விருப்பப்பட்டு நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிறுமி மாயமானது தொடர்பாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணைக்கு பின்னர் அவர் கடத்தப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர், நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதி சிறுமிக்கு 18 வயது ஆகிவிட்டது என்றும், அவர் தனது முடிவை எடுக்க தகுதி உடையவர் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan mass Conversion Christian child girl and marriage by 43 year Muslim


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal