பாகிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பணி நேரம் மாற்றம்! புதிய பிரதமர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் அரசு ஊழியர்களின் பணி நேரம் மற்றும் வார இறுதியில் ஒரு நாள் மட்டும் விடுமுறை என புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷபாஷ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார்.

இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனையடுத்து இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. 

இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய பிரதமராக நேற்று பணியை துவக்கிய அவர் பாகிஸ்தான் அரசு ஊழியர்களின் பணி நேரம் காலை 10 மணி என்பதை மாற்றி காலை 8 மணிக்கு பணியினை தொடங்க வேண்டும் என்றும், வார இறுதியில் இரண்டு நாள் விடுமுறையை குறைத்து ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்று உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan government employees working time changed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->