ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதி விபத்து - 150க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் - Seithipunal
Seithipunal


ஸ்பெயினில் பார்சிலோனாவிற்கு அருகில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

ஸ்பெயின் பார்சிலோனாவில் உள்ள மன்ரேசா ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 8 மணியளவில் பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட 155 பயணிகள் காயமடைந்தனர். இதில் 39 பேர் உள்ளூர் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பார்சிலோனாவிற்கு வடக்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொன்ட்காடா நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதாக பிராந்திய தீயணைப்பு சேவை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 150 Injured After Two Trains Collide In Spain


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->