துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன இந்தியர்.! தீவிர தேடலில் மீட்புக்குழு.! - Seithipunal
Seithipunal


நேற்று அதிகாலை முதல் துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் அதிகாலையில் நிகழ்ந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதையடுத்து, இன்று பிற்பகல் நிலவரப்படி துருக்கி மற்றும் சிரியா எல்லையில், உயிரிழப்பு பதினொரு ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளை தோண்டத்தோண்ட எங்கு பார்த்தாலும் சடலங்களாகவே உள்ளன. ஆகவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கருதப்படுகிறது. 

தொடர்ந்து, மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பத்து மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இந்தியர்கள் எழுபத்தைந்து பேரிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரை காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், காணாமல் போனவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், தொலைதூர பகுதியில் சிக்கியிருந்த பத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One Indian People Missing in Turkey earthquake


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->