இனி திருமணங்களில் இசை நிகழ்ச்சி நடத்த தடை..  எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் வேலைக்கு செல்லவும் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தடை விதித்தது. 

மேலும், பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பூங்காக்களில் ஆண்கள் இருக்கும் போது பெண்களை அனுமதிக்கக் கூடாது. திரைப்படம், கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல கூடாது மற்றும் ஜிம் மற்றும் பூங்காகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதனால் பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட முடியாமல் போய்விட்டது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருமண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சி நடத்தவும், பாடல் பாடவும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். தாலிபர்களின் இந்த உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இசை, நடனம் போன்றவை இல்லை என்றால் திருமண வீட்டிற்கும் தூக்க நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் இருக்காது என்று ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No more musical performances at weddings in Afghanistan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->