பயங்கரவாத அச்சுறுத்தலாளால் மூடப்படும் பள்ளிகள் - நைஜீரியாவில் படிப்புகளை இழக்கும் சிறார்கள்?..! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் போஹோஹராம் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது பள்ளி மாணவர்களை கடத்தி சென்று, அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாகவும் மாற்றி வருகின்றனர். 

மேலும், பள்ளி மாணவர்களை குறிவைத்து கடத்தும் பிற ஆயுதக்குழு, மாணவர்களை பிணைய கைதிகளாக மாற்றி தங்களுக்கு தேவையானதை சாதிக்கும் கொடூரம் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதமாகவே பள்ளி மாணவர்களை குறிவைத்து கடத்தும் செயல்கள் அதிகரித்து வந்தது. 

இந்நிலையில், நைஜீரியாவில் உள்ள வடமேற்கு பகுதியான கேப்பி மாகாணத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளை மூட மாகாண அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்மாகாணத்தில் இருக்கும் 7 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் பல பள்ளிகள் மூடப்படும் எனவும் அங்குள்ள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 

கொடூரத்தின் உச்சம், சுயநலப்போக்கால் ஒரு தலைமுறையே படிப்பை நிம்மதியாக பெற இயலாத தருணத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nigeria Schools Shutdown due to Terrorist Attack


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal