சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து! 22 ஆண்டுக்கு பிறகு நிமிர்ந்து நிற்கும் நியூசிலாந்து!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

லண்டன் லார்ட்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிய 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 303 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்களை மட்டுமே எடுக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 388 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 41 ரன்களை 2 விக்கெட்டுகளை இழந்து எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 1999 பிறகு இங்கிலாந்தில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து சாதனை புரிந்துள்ளது. மேலும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான கேப்டன் வில்லியம்சன் விக்கெட் கீப்பர் வாட்லிங் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி ஆகியோர்  களமிறங்காத நிலையிலும், இங்கிலாந்தின் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றிருப்பது அந்த அணிக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

வருகின்ற 18ம் தேதி இந்தியாவுடன் விளையாட இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அந்த அணி மிகப்பெரிய அசுர பலத்துடன் களமிறங்க இருப்பது இந்திய அணிக்கு சற்று அச்சுறுத்தலை உருவாக்குவதாக அமைந்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand won the match and series in England against England


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->