திடீரென அதிகரித்த கொரோனா தொற்று.. மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த நேபாள அரசு.!! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 19,257,726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 717,687 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் தளர்த்தப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நேற்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 5 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் மீண்டும் அமல் படுத்தப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அனைத்து மாவட்டங்கள் மற்றும் காத்மாண்டு பள்ளத்தாக்கில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. 

அந்த பகுதிகளில் ஹோட்டல்கள், உணவகங்கள், அழகு நிலையங்கள் மூடப்படும். மேலும், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுப் போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nepal re imposes corona restrictions


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->