ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது - பாகிஸ்தான் நிதி அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


நேற்று துபாயில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் மத்தியில் பாகிஸ்தான் நாட்டின் நிதி அமைச்சர் இஷாக் தார் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

"கடந்த மாதம் நான் அமெரிக்காவுக்கு  சென்றபோது, அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகளை சந்தித்து பேசினேன். அப்போது, ரஷியா நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

ரஷியாவின் எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் விலையை விட மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், இந்தியா எப்போதும், சர்வதேச சந்தை விலையை விட 30 சதவீதம் குறைவான விலைக்கு ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்குகிறது.

பாகிஸ்தானில், இம்ரான் கான் தலைமையில் அமைந்த அரசு ரஷிய அதிகாரிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கும் ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்ய உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ரஷியா மறுத்ததனால், தற்போது பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ரஷியாவிடம் இருந்து குறைவான விலையில் எண்ணெயை வாங்கும் தனது விருப்பத்தினை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே ரஷியாவிடம் தெரிவித்து விட்டது. 

ரசியாவிடம் இருந்து என்னை வாங்குவதை அமெரிக்கா தடுக்க முடியாது. இதுகுறித்து முன்பே அமெரிக்காவிற்கு தகவலும் அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவும், ரஷிய எண்ணெய்யை வாங்குகிறது. 

அந்தவகையில், எங்களது அமைச்சகமும் ரஷிய எண்ணெய்யை வாங்கும். அதற்கான நடவடிக்கைகளை வருகிற மாதங்களில் அரசு கண்டிப்பாக மேற்கொள்ளும்.

இதுமட்டுமல்லாமல், சவுதி அரேபியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனும் பாகிஸ்தான் நிதி சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளிலு,ம் ஈடுபட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dubai pakisthan finance minister speach


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->