மொரொக்கோ | கொடூர சாலை விபத்து! 24 பேர் பலி! - Seithipunal
Seithipunal


வட ஆப்பிரிக்கா, மொரொக்கோ நாட்டில் மத்திய மாகாணமான அஜிலாலில் மிக கொடூரமான சாலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

மொரொக்கோ, அஜிலால் பகுதியில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெறும் வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. 

சாலையில் இருந்த வளைவை கடக்க முயன்ற மினி பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மொரொக்கோ வட அமெரிக்க நாடுகளின் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பல ஏழை குடிமக்கள் அந்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் பயணம் செய்ய மினி பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். 

ஆண்டு தோறும் சராசரியாக 3500 சாலை உயிரிழப்புகள் மற்றும் 12000 படுகாயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய சாலை பாதுகாப்பின் படி, ஒரு நாளைக்கு சராசரியாக 10 உயிரிழப்புகள் பதிவாகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

morocco minibus accident 24 killed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->