லண்டனில் டீன் ஏஜ் பெண்களை குறிவைக்கும் பாகிஸ்தான் நாடக காதல் கும்பல்...! சிக்கிய சீக்கிய பெண் பாகிஸ்தானில் மீட்பு!
Love Trap Targeting Teenage Girls in Hounslow A Shocking Exposé
இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் அமைந்துள்ள ஹவுன்ஸ்லோ பகுதி, கல்வி நிலையங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு மட்டும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சிலர், பள்ளிகளில் பயிலும் டீன் ஏஜ் வயதிலுள்ள இளம் பெண்களை குறிவைத்து, காதல் என்ற பெயரில் வலையில் சிக்க வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, குழுவினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்துவதோடு, ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளில் சேர்க்க முயற்சிப்பதும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கும்பலின் செயற்பாடுகள், ஆங்கிலேயப் பெண்களுடன் மட்டும் முடிவடையவில்லை. லண்டனில் வசிக்கும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்களையும் அவர்கள் குறிவைத்துள்ளனர்.
ஹவுன்ஸ்லோ பகுதியைச் சேர்ந்த ஒரு சீக்கிய டீன் ஏஜ் பெண்ணுடன், சுமார் 35 வயதை கடந்த நபர் ஒருவர் நீண்ட காலமாக தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண் 13 வயதாக இருந்தபோதே பழக்கம் ஏற்படுத்தப்பட்டு, 16 வயது அடைந்ததும், குடும்பத்தை விட்டு வெளியேறி தன்னுடன் வாழும்படி அந்த நபர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ‘ஏகே மீடியா 47’ அமைப்பினர் முன்னிலை வகித்து, சுமார் 200 பேர் கலந்து கொண்ட போராட்டம் நடத்தப்பட்டது.
சமூக அழுத்தம் அதிகரித்ததை அடுத்து, போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றச்சாட்டுக்குள்ளான நபரை கைது செய்தனர். இந்த சம்பவம், இளம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
Love Trap Targeting Teenage Girls in Hounslow A Shocking Exposé