சீன மருத்துவரின் மனைவி கண்ணீர் பதிவு.. சோகத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக மக்கள் மனதில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸின் தாக்கம் குறித்து முதல் முதலில் எச்சரிக்கை விடுத்து உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரது மனைவி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

சீன நாட்டில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் லீ வேனிலியாங் (Li Wenliang). இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று பரவுகிறது என்றும், அடுத்த மிகப்பெரிய வைரஸ் சீனாவில் வேகமாக பரவுகிறது என்று கூறி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். 

இதனை முதலில் சீன அரசு கண்டுகொள்ளாது இருந்து வந்த நிலையில், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்தது. இதன் பின்னர் கொரோனா பரவல் சீனாவில் உச்சக்கட்டம் அடைந்து, சுமார் 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். 4,600 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 

இந்த நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் மருத்துவர் லீ வேனிலியாங்கும் ஒருவராக இருந்தார். இவரது மரணத்திற்கு சீன அரசு, லீ வேனிலியாங்கின் குடும்பத்தாரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. 

இந்த நிலையில், லீ வேனிலியாங்கின் மனைவியான பியூவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை பியூ தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், " நீங்கள் சொர்க்கத்தில் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எனக்கு அளித்த கடைசிப் பரிசு இதுதான். இதனை நான் மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்வேன் " என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Li Wenliang wife delivery male baby


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->