கோகினூர் வைரம் இந்தியாவுக்கு திரும்ப கிடைக்குமா? - பதிலளித்த மத்திய அரசு..! - Seithipunal
Seithipunal


ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இங்கிலாந்து அரசியாக இருந்த ராணி விக்டோரியாவுக்கு, 1849-ம் ஆண்டு துலீப் சிங் என்ற இந்திய மகாராஜா 21 கிராம் எடை கொண்ட 108 காரட் கொண்ட கோகினூர் வைரம் ஒன்றை வழங்கினார். 

அதன் பின்னர் இந்த வைரம் இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தில் அமைக்கப்பட்டு அலங்கரித்து வருகிறது. அந்த கிரீடம், விலைமதிப்பற்ற இரண்டாயிரத்து எண்ணூறு வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடை கொண்ட 108 காரட் கோகினூர் வைரம் பதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, அரசின் சில முக்கிய நிகழ்ச்சிகளில் இந்த கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிந்து கொண்டு கலந்து கொள்வது இங்கிலாந்து ராணிகளின் வழக்கம். சமீபத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர், ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட விலைமதிப்பில்லா பொருட்களை திரும்ப ஒப்படைக்கும்படி டுவிட்டரில் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

அதேபோல், இந்திய தரப்பிலும், கோகினூர் வைரம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. இதுபற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, 

"இந்த விவகாரத்தில் திருப்தியான தீர்வு ஏற்படுவதற்கான வழிகளை மத்திய அரசு தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இந்த கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு அளித்த பதிலையும் அவர் சுட்டி காட்டி பேசியது மட்டுமல்லாமல், இந்த விவகாரம் பற்றி இங்கிலாந்து அரசாங்கத்திடம் அவ்வப்போது எடுத்து கூறி வருகிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kohinoor diamond return india central government answer


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->