வடகொரியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தை அதிவேகமாக விரிவுபடுத்த அதிபர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வடகொரியா மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்தது. மேலும் ஆங்கில வருடப்பிறப்பான இன்றும் வடகொரியா பியாங்யாங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:50 மணியளவில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்தது.

இதையடுத்து நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் அணு ஆயுதக் களஞ்சியத்தை அதிவேகமாக விரிவுபடுத்தவும், புதிய அதிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கவும் உத்திரவிட்டார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற பகைமை நாடுகளின் ஆபத்தான போக்குக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், வடகொரியாவின் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் நாட்டில் ராணுவ பலம் இருமடங்காக்கப்படும் என்று கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kim Jong Un orders exponential expansion of nuke arsenal in North Korea


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->