காசா மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கவில்லை! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஹமாஷ் அமைப்புக்கு இடையே நீடித்து வரும் போரானது தற்போது 11 வது நாளை எட்டியுள்ள பரபரப்பான சூழலில் அமெரிக்க அதிபர் ஜோப் பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்ற நிலையில் இருவரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதற்கு முன்னதாக காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு உலக நாடுகள் பல கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் காசா மருத்துவமனை மீதான தாக்குதலை தங்கள் தரப்பு நடத்தவில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு செயற்கைக்கோள் படத்தை வெளியிட வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. மேலும் இஸ்ரேல் தரப்பில் ஏவுகணை தாக்குதலின் போது தோல்வி ஏற்பட்ட, அப்போது இருவர் தொலைபேசியில் பேசும் பேச்சை இடைமறித்து பதிவு செய்யப்பட்ட ஆடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. 

பாலஸ்தீனத்தை சேர்ந்த இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி உள்ள நிலையில் தங்கள் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

இவ்வாறான பரபரப்பான போர் சூழலில் இஸ்ரேல் சென்றடைந்த பைடன் "ஹமாஷ் அமைப்பினரின் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 31 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்புடனான போரில் அமெரிக்கா இஸ்ரேலுடன் துணைநிற்கும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். மேலும் காசா மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தவில்லை" என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe biden confirm Israel not attacked on gaza hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->