தன்னையே வாடகைக்கு விட்டு ரூ.7000-10000 சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞர்.! எப்படின்னு பாருங்க.! - Seithipunal
Seithipunal


ஷோஜி மோரிமோட்டா என்ற 38 வயது ஜப்பான் இளைஞர் ஒருவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது முதலாளிகளின் அடக்குமுறைகள் அதிகாரிகளுடன் ஏற்பட்ட சிக்கலால் அவர் வேலையை விட்டு நின்று விட்டார். 

அதன்பின்னர் சமூகவலைதளங்களில் எளிதான வேலைகளை செய்ய உங்களுக்கு தேவை இருந்தால் என்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு பதிவிட்டார். இந்த பதிவில் கடினமான வேலைகளை என்னால் செய்ய முடியாது உங்களுக்கு பொழுது போக்க வேண்டும், கடைக்கு செல்ல வேண்டும், விளையாட ஆள் வேண்டும் என்றால் உங்கள் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

முதலில் குறைவான தொகையை தான் வாடகையாக அவர் வசூலித்தார். தற்போது, அவர் 7000 முதல் 10000 வரை ஒரு நாளைக்கு சம்பாதிக்கிறார். இதுகுறித்து அவர் கூறிய போது, கொரோனா காலத்தில் தனிமையினால் பலரும் தற்கொலை செய்து கொண்டனர். அப்பொழுது அவர்களை காப்பாற்ற என்னை நான் வாடகைக்கு விட துவங்கினேன். 

தற்போது டோக்கியோ முழுவதும் பிரபலமாகி விட்டேன். என்னை மக்கள் மிஸ்டர் வாடகை என்று தான் அழைப்பார்கள். நான் நிறுவனங்களில் பணியாற்றும் போது என்னை பலரும் அடக்குமுறை செய்தனர். ஆனால் இப்போது என்னைக் கேள்வி கேட்க யாருமே இல்லை. இதுவரை 1000 பேருக்கு மேல் என்னை வாடகைக்கு அழைத்துள்ளனர்.

இதில் பெரும்பாலான நபர்கள் பெண்கள்தான். வீட்டை சுத்தம் செய்வது, பொருட்களை தூக்க வேண்டும் என்று அவர்கள் அழைத்தால் செல்லமாட்டேன். பாலியல் ரீதியாக அழைத்தாலும் நிராகரித்து விடுவேன். அவர்களுடன் பொழுது போக்க தான் செல்வேன். என்னுடன் மனக்குறைகளை பலரும் பகிர்ந்து கொள்வார்கள். இதன் மூலம் ஆறுதல் கிடைப்பதாக அவர்கள் தெரிவிப்பார்கள்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan Youngster rent himself


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->