2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


இத்தாலி, போலோக்னா நகரில் இருந்து ரெமினி என்ற இடத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் வந்தது. 

இதனை அறியாத ஓட்டுநர்கள் உடனடியாக ரயிலை நிறுத்த முயற்சி செய்தும் எதிர்பாராத விதமாக 2 ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சில ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதனால் ரயிலில் இருந்தவர்கள் முன்னும் பின்னும் விழுந்ததில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் சில மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 

இதற்கிடையே 2 ரயில்களும் நேருக்கு நேர் மோதிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்து சிக்னல் கோளாறு காரணமாக ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy two trains crash 17 injured


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->