3 லட்சம் வீரர்களுடன் தாக்குதலுக்கு தயார்!! காசா எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம்!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தொடர் ராக்கெட் தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா தனது ராணுவத்தையும் ஆயுதங்களையும் இரண்டு போர்க்கப்பல்களில் அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழி தாக்குதலை நடத்தி வந்த நிலையில் தற்போது தரைவழி, கடல் வழி தாக்குதலுக்கும் தயாராக உள்ளது. 

சுமார் மூன்று லட்சம் படை வீரர்களை காஜா எல்லை பகுதியில் குவித்துள்ள இஸ்ரேல் ராணுவம் பீரங்கி டேங்கர்களையும் நிலை நிறுத்தியுள்ளது. இதனால் இருநாடு எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் ராணுவ வீரர்களை சந்தித்து பேசிய அந்நாட்டு பிரதமர் மும்முனை தாக்குதல் உள்ளிட்ட பலமுனை தாக்குதலை நடத்த உள்ளோம். அதற்கான நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்த ராணுவம் தயாராகி வருகிறது என தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் காசா பகுதியை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 29 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெரும்பான்மையான பாலஸ்தீனர்களுக்கும் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார். இந்த போரால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது என இஸ்ரேலுக்கு அறிவுறுத்திருந்தார். ஆனால் நேற்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் அமைப்பை அழிப்போம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israeli army ready for three pronged attack on hamas


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->