இறங்கி வந்த இஸ்ரேல்!! ஹமாஸ் குறுக்க வந்தா? அமெரிக்கா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த வாரம் நடத்திய தாக்குதலை அடுத்து சுமார் 12 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில் காசா பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

குறிப்பாக மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்க முடியாமல் மருத்துவர்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காசாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் கூறுகையில் காஜாவிற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் முன்வந்து இருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது.

இதற்காக காஜாவிற்குள் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது குறித்து இஸ்ரேலுடன் ஆலோசனையின் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார். அதை வேலையில் காக்காவுக்கு செல்லும் மனிதாபிமான உதவிகளை ஹமாஸ் தடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக போராடல் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க இஸ்ரேல் முன் வந்திருப்பதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel agrees to provide humanitarian aid to Gaza


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->