வாட்ஸ்அப்பை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் செயலி முடக்கம்.. என்ன தான் ஆச்சு.? - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் எல்லோருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தரத்தினை மெட்டா நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. 

உலக பேமஸான டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின் இன்ஸ்டாகிராமில் உருவாக்கப்பட்ட ரீல்ஸ் அப்டேட் தான் தற்போது மிகவும் பிரபலமானது.அந்த வகையில் அடுத்தடுத்து பயனாளர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு இன்ஸ்டாகிராம் நிறுவனம் அப்டேட் கொடுத்து வருகின்றது. 

இந்த நிலையில் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் முடங்கியுள்ளது. அந்த வகையில் உலக அளவில் எங்கள் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது என பல்வேறு பயனர்களுக்கு செய்தி வந்துள்ளது. இதனையடுத்து இதனை சரி செய்ய முயற்சி செய்து வருவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் முடங்கியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Instagram server down world wide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->