மாயமான விமானத்தின் நிலை?.. பயணிகளின் உயிர்?.. கண்ணீருடன் விமான நிலையத்திற்கு படையெடுக்கும் உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியாய்வில் இருந்து 152 பேருடன் புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் கதி என்ன? ஆனது எனது தொடர்பான அச்சமும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், இந்தோனேஷியா நாட்டில் உள்ள ஜாகர்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீவிஜயா விமானம் (விமான எண் SJ182) மாயமாகியுள்ள நிலையில், 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கையில் திடீரென ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது. 

ஆனால், இந்த விமானத்தில் 152 பேர் பயணம் செய்யவில்லை என்றும், விமான குழுவினர் மற்றும் பயணிகள் உட்பட 59 பேர் பயணம் செய்ததாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது. இந்த விமானம் புறப்பட்ட 4 நிமிடத்திற்கு உள்ளாகவே, விமான கட்டுப்பாட்டு அறையுடன் கொண்ட தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அப்பகுதியில் உள்ள கடலில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என தகவல் தெரியவந்த நிலையில், விமானத்தின் பல பாகங்கள் நீரில் மிதந்துகொண்டு இருந்ததும் அப்பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது. 

விமானத்தை தேடும் பணியில் தேசிய மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விமான நிலையங்களில் கண்ணீருடன் குவிந்தவண்ணம் உள்ளனர். மேலும், இந்த விமானம் போயிங் 737-500 ரக விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia Sriwijaya Air Flight Boeing 737-500 Flight Number SJ182 Missing Rescue Action


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal