காதல் கரம் பிடித்த மனைவியை திட்டமிட்டு மதம் மாற்றி தற்கொலைப்படையாக மூளைச்சலவை செய்த கொடூரம்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த மாதத்தில் இலங்கையில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் சேர்ந்து நடத்திய தாக்குதலில் மொத்தமாக சுமார் 257 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை சுமார் 8 தற்கொலை படை பயங்கரவாதிகள் சேர்ந்து நடத்தியது தெரியவந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் புகைப்படத்தை அந்நாட்டு இராணுவத்தினர் சமீபத்தில் வெளியிட்டனர். 

இந்த புகைப்படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்னும் இந்து பெண்ணின் முகமும் இடம் பெற்றிருந்த நிலையில்., புலஸ்தினி மகேந்திரன் அங்குள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் தெதாத் தீவு பகுதியை சார்ந்தவர் என்பதும்., இவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் முகமது ஹஸ்தும் என்ற முஸ்லீம் மாணவருடன் ஏற்பட்ட நட்பை அடுத்து இவர்களுக்குள் காதல் மலர்ந்து., இருவரும் திருமணம் செய்யும் முடிவை எடுத்துள்ளனர். 

இதன் காரணமாக இந்து மதத்தில் இருந்து விலக்கம் அடைந்த புலஸ்தினி மகேந்திரன் தனது பெயரை சாரா என்று மாற்றிக்கொண்டு மதம் மாறினார். இவர்கள் இருவரும் அங்குள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில்., மதம் மாறிய புலஸ்தினி பயங்கரவாதியாக மாற்றம் அடைந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இந்த தாக்குதலில் இருவரும் மனித வெடிகுண்டாக மாறியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. 

இந்த செய்தியை அறிந்த புலஸ்தினி மகேந்திரனின் தாயார் கடும் அதிர்ச்சிக்குள்ளாகவே இது குறித்து தனது கண்ணீர் பதிவை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது., எனது மகளை திட்டமிட்டு காதலித்து ஏமாற்றம் செய்து கடத்தி சென்றுள்ளான்., பின்னர் திருமணம் என்ற நாடகத்தை அரங்கேற்றி மனித வெடிகுண்டாக மாற்றி கொலை செய்துள்ளான் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in srilankan bomb blast investigation about terrorists


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->