விண்வெளியில் கான்க்ரீட் கட்டிடங்கள்?..! வெளியான சுவாரஸ்ய தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நவீன வளர்ச்சியின் மூலமாக பல விதமான செய்திகளை அறிந்து வருகிறோம். தினமும் வானியல் தொடர்பான ஆராய்ச்சியில்., அந்தந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சாதனைகளை செய்து., புதிய கிரகங்களை கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். 

இந்த சமயத்தில்., ஆராய்ச்சியாளர்கள் பல விதமான கோள்களையும்., விண்கற்கள் போன்றவற்றையும் கண்டறிந்த நிலையில்., வரும் காலத்தில் பூமியில் இருந்து பிற கிரங்களுக்கு பயணம் செய்து அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற தொடர் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில்., சர்வதேச விண்வெளி நிலையமானது விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களின் பல விதமான முயற்சியில்., விண்வெளியில் கான்க்ரீட் அமைக்க இயலுமா? என்பது குறித்த ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். 

Nasa, NASA,

இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்., அமெரிக்காவின் பேராசிரியரான அலெக்ஸாண்ட்ரா தெரிவித்துள்ளதாவது., நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் சமயத்தில்., விண்வெளியில் இருக்கும் தட்ப வெப்பம் மற்றும் கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

இந்த கதிர்வீச்சுகள் மற்றும் தட்ப வெப்பத்தினை தாங்குவதற்கு கான்க்ரீட் நல்ல தீர்வாக அமையும். வரும் காலங்களில் விண்வெளியில் கான்க்ரீட் அமைக்கும் சமயத்தில்., நமக்கு நன்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. வரும் காலத்தில் இது மிகப்பெரிய பயனாக இருக்கும். 

இது தொடர்பான ஆராய்ச்சியை., மைக்ரோ கிராவிட்டியில் சிமிண்ட் இறுகும் தன்மை குறித்த ஆராய்ச்சி என்று பெயர் வைத்து., தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in space nasa scientist research about to construct concrete


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->