தீடீரென தொடர்ந்து தாக்கிய வெப்ப காற்று.! 44 பேர் மருத்துவமனையில் சிகிச்சை.!!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது கோடை காலமானது தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு கடுமையான வெப்பமானது நிலவி வருகிறது. மேலும்., தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெயிலானது வாட்டி வதைக்கிறது. 

அடிலெய்டு மாகாணத்தின் வடக்கு பகுதியில் நேற்று சுமார் 49.5 டிகிரி சென்டிகிரேடு வெப்பமானது நிலவியுள்ளது., அடிலெய்டு நகர் பகுதியில் 47.7 டிகிரி வெப்பமானது பதிவாகியுள்ளது என்று அம்மாநில வானிலை ஆய்வு மையமானது தெரிவித்துள்ளது.

மேலும்., கடந்த 1939 ம் வருடத்திற்கு பின்னர் இந்த வருடம் அப்போதைய வெப்ப நிலையை விட அதிகளவு வெப்பமானது நிலவி வருகிறது என்று தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள 13 நகரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. 

மக்கள் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பீர் வகைகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்., வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மரங்களின் அடியிலும்., குளிர்சாதன வசதிகளையும் தொடர்ந்து உபயோகம் செய்த வண்ணம் உள்ளனர்.  

தொடர்ந்து வீசும் வெப்பக்காற்றின் தாக்கத்தால் பலவிதமான உடல் உபாதைகளுக்கும்., பல நோய்களுக்கும் அங்குள்ள மக்கள் ஆளாகியுள்ளனர்., மேலும்., வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 44 பேர் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

(வெயிலின் தாக்கத்தில் வானெலியில் இருந்த முட்டைகள் சுட சுட தயாரான காட்சி)

இதன் காரணமாக சுமார் 90 குதிரைகள் மற்றும் பல உயிரினங்கள் தொடர்ந்து இறந்த வண்ணம் உள்ளது., இது குறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் " பருவ நிலையில் ஏற்பட்ட தொடர் மாற்றத்தின் காரணமாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்தும்., மக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்டும் வருகின்றனர் என்று தெரிவித்தனர். 

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அங்குள்ள மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு படையெடுத்து குளியல் போட்டு கொண்டாடிய காட்சிகள்.. 

English Summary

in Australia heat wave to due global warming changes peoples enjoy at beach


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal