கட்டுக்கடங்காமல் பற்றியெரியும் காட்டுத்தீ.! அரசு பிறப்பித்த அவசர உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் தெற்கு கடற்கரை பகுதிகளில் காட்டுத்தீயின் தீவிர வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தின் போது பல்வேறு மாகாணத்தில் காட்டுதீயானது பரவியது. இந்த காட்டுத்தீயின் காரணமாக தற்போது வரை சுமார் 1300 க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ள நிலையில்., சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் அளவிலான நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாது கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பல்வேறு இடங்களில் வறட்சியும் நிலவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு தற்போதுவரை 18 பேர் பலியாகியுள்ள நிலையில்., 12 பேர் மாயமாகியுள்ளனர். மேலும்., இந்த வாரத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. 

இந்த தருணத்தில்., ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் தெற்கு கடற்கரை பகுதியில் காட்டுத்தீ பரவி வெப்பம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்களை வெளியேற அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வரும் 7 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில்., காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in australia forest fire peoples died govt announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->