அசுரவேகத்தில் மரண காட்டு காட்டிய சூறாவளி.. 25 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்.. பதைபதைப்பு வீடியோ..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள தெற்கு பகுதியில் அமைந்துள்ள டென்னிஸி மாநிலத்தில் கடுமையான சூறாவளி தாக்குதலானது நேற்று நடந்துள்ளது. அசுரவேகத்தில் சுழன்ற காற்றால் ஏராளமான கட்டிடங்கள் அடுத்தடுத்து சேதமடைந்துள்ளது. 

மேலும், பல வீடுகளின் கூரைகள் சூறாவளியில் சிக்கி பறந்தள்ளது. அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் அடுத்தடுத்து சாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். 

சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வாகனத்தில் இருந்து விமான நிலையத்தில் உள்ள விமானங்கள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் சாலைகளில் தலைகுப்பற கவிழ்ந்து கிடந்தது.

இந்த சூறாவளியினால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 25 பேர் பலியான நிலையில், 150 க்கும் அதிகமானோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில், பெரும் சேதமானது இந்த சூறாவளியால் ஏற்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in american tennessee storm attack peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->