அமெரிக்கா - ஈராக் பதற்றம்..! பழிவாங்க சபதம்.. அடுத்தகட்ட மிரட்டலில் அமெரிக்கா.!! - Seithipunal
Seithipunal


ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரின் விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்கா வான்வழி தாக்குதலின் மூலமாக ஈரான் நாட்டுடைய இராணுவ தளபதி குவாஸிம் சுலைமானியை கொன்றது. மேலும்., இந்த தாக்குதலின் போது இராணுவ துணை தபதி அபு மஹதி அல் முகந்தீஸ் உட்பட 8 பேர் மொத்தமாக கொல்லப்பட்டனர். 

அமெரிக்காவுடைய இந்த நடவடிக்கையின் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் இருக்கும் நாடுகளில் கடுமையான பதற்றமானது அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் ஈரான் நாட்டில் புரட்சிகர இராணுவ தளபதிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் காணி இராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். 

மேலும்., தற்போது நடைபெற்ற தாக்குதல் விவகாரம் குறித்து பேசிய கானி "சுலைமானி கொலை செயப்பட்டதற்கு கட்டாயம் பழிதீர்ப்போம்" என்று தெரிவித்துள்ளார். ஈராக் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் அனைத்தும் வெளியேற வேண்டும் என்று ஈராக் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டுள்ளது. 

trump,

இந்த நேரத்தில்., புதியதாக பொறுப்பேற்ற இராணுவ தளபதியானது மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் வருடத்தில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தமும் கைவிடப்படுவதாக ஈராக் தெரிவித்துள்ளது. 

இதனடிப்படையில் ஈரான் மீண்டும் அணு ஆயுத தயாரிப்பை ஊக்குவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில்., மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் மீண்டும் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பான அறிக்கையில்., ஈராக் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறினால் பல பில்லியன் டாலர்கள் இழப்பீடாக தர வேண்டும் என்றும்., இதனை தர மறுக்கும் சமயத்தில் அளவுக்கு அதிகமான மற்றும் நினைத்து பார்க்க இயலாத பொருளாதார தடைகளை விதிக்கவேண்டியிருக்கும் என்றும் மிரட்டலை விடுத்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america iraq problem economical war warning by american president


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->