ஆப்கானிஸ்தான் ஆர்மியில் ஸ்லீப்பர் செல் அரங்கேறிய கொடூர தாக்குதல்.. 24 பேர் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2001 ஆம் வருடம் முதலாகவே தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டு வந்த அரசு படைகளுக்கு ஆதரவாக, அமெரிக்காவின் நேட்டோ படைகள் ஆதரவு தந்தது. 

இந்த உள்நாட்டு போரினை முடிவிற்கு கொண்டு வர தலிபான் அமைப்பிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது, இதன் முடிவாக ஒப்பந்தமும் போடப்பட்டது. இருப்பினும் அரசு படைகளின் மீதான தாக்குதல் தொடரும் என்று தலிபான் அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது.

இந்நிலையில், பயங்கரவாத அமைப்பின் கொள்கையை ஏற்ற நபர்கள், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையில் இரகசியமாக பணியாற்றி வருகின்றனர். இதனால் இவர்கள் சக வீரர்களின் மீதே திடீரென தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சபுல் மாகாணத்தில் இருக்கும் குவாட் இராணுவ தலைமை தளத்தில் பாதுகாப்பு படையினர் உறங்கிக்கொண்டு இருந்தனர். இந்நேரத்தில், பயங்கரவாத கொள்கையை ஏற்ற 4 பேர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Afghanistan army officers killed by terrorist


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->