நாம் அமெரிக்காவின் அடிமையாக உள்ளோம், இந்தியா சுதந்திரமாக உள்ளது - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் : லாகூரில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்திய நாட்டை பெருமையாக பேசி உரையாற்றினார். 

அவரின் அந்த உரையில், "ஒரு சமயத்தில்தான் இந்தியாவும்-பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது. ஆனால், இந்திய நாடு தனது மக்கள் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளது.

தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடிகிறது. ஆனால், பாகிஸ்தானின் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் முடியவில்லை. 

ஒரு உதாரணம் சொல்கிறேன். ரஷ்யா-அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது.  

அப்போது, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள்". (அமைச்சர் ஜெய்சங்கர் பேசும் வீடியோவை காட்டினார்)  "நீங்கள் யார்? ரஷியாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு" என்று அதில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

வீடியோ முடிந்ததும் பேசிய இம்ரான்கான், "ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து வாங்கவில்லை. 

நம் நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. நம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை நான் எதிர்க்கின்றேன்" என்று இம்ரான்கான் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imran khan say about india usa russia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->