கழிவறையை சுற்றி கேமரா.. ஆபாச படம் எடுத்த மருத்துவர் சிக்கியது எப்படி?
How did the doctor who took obscene pictures around the bathroom get caught?
ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்த டாக்டர் கைது செய்யப்பட்டநிலையில் அவருடைய சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை முடக்கினர். தற்போது ரூ.28 லட்சம் பிணைத்தொகை செலுத்தப்பட்டதன்பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பெண் டாக்டர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது இதுதொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ரயான் சோ என்ற 28 வயதான டாக்டர் இரவு நேரத்தில் அடிக்கடி கழிவறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர். இதையடுத்து சிங்கப்பூர் வம்சாவளியை சேர்ந்தவரான ரயான் சோ அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது காம புத்தியால் ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். 2021-ம் ஆண்டு பயிற்சி டாக்டராக பணியில் சேர்ந்ததில் இருந்து ஆபாச படம் எடுப்பது தில் ஈடுபட்டுள்ளார். விசாரணையில் அவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் இருந்த 4,500 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டநிலையில் அவருடைய சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கினர். இந்தநிலையில் அவர் தற்போது ரூ.28 லட்சம் பிணைத்தொகை செலுத்தப்பட்டதன்பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மருத்துவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
How did the doctor who took obscene pictures around the bathroom get caught?